பாகிஸ்தான் மற்றும் துபாயில் இருந்து உமா பாரதிக்கு வந்த மிரட்டல் அழைப்பு !! - Seithipunal
Seithipunal


உமா பாரதியின் பாதுகாப்பு அதிகாரிக்கு செல்போனில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் இருந்து ஒரு மர்மமான அழைப்பு வந்துள்ளது. அந்த செல்போனில் பேசியவர் உமாபாரதியின் இருப்பிடம் குறித்து பாதுகாப்பு அதிகாரியிடம் தொலைபேசியில் விசாரித்துள்ளார். இந்த விஷயம் குறித்து உமாபாரதியின் அலுவலகம் பாஜக அலுவலகத்துக்குத் தெரிய படுத்தியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த உமாபாரதியின் பாதுகாப்பு அதிகாரிக்கு செல்போனில் அழைப்பு விடுத்த அந்த மர்மமான நபர் தன்னை க்ரைம் பிராஞ்ச் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மேலும், அந்த நபர் உமாபாரதியின் விசாரணைக்காக அவரது இருப்பிடத்தை அறிய விரும்புவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. அழைப்பு விடுத்த அந்த நபர்  உமாபாரதியின் இருப்பிடத்தை பற்றி பலமுறை கேட்டுள்ளார். இதனால் பாஜக தலைவர் உமாபாரதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

உமாபாரதிக்கு பாகிஸ்தான் மற்றும் துபாயில் இருந்து வந்ததாக கூறப்படும் அழைப்புகள் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். செல்போனில் உள்ள ட்ரூகாலர் மூலம் இரண்டு வாட்ஸ்அப் எண்களையும் கண்டுபிடித்ததில், ஒரு அழைப்பு பாகிஸ்தானில் உள்ள எம் ஹுசைனின் எண்ணிலிருந்து வந்தது என்றும், மற்றொறு அழிப்பு துபாயிலிருந்து அப்பாஸ் என்ற நபரிடமிருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

இதை பற்றி உளவுத்துறை ஏ.டி.ஜி., ஜெய்தீப் பிரசாத் கூறுகையில், "குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும்" என தெரிவித்தார். அந்த இரண்டு அழைப்புகளின் சரியான இடத்தைக் கண்டறிய சைபர் விசாரணை நடத்தப்படுகிறது என்று கூறினார்.

உமா பாரதி, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அமைச்சகத்தின் போது மனிதவள மேம்பாடு, சுற்றுலா, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திலும், நிலக்கரி மற்றும் சுரங்கங்களிலும் பல்வேறு மாநில அளவிலான மற்றும் அமைச்சரவை அளவிலான இலாகாக்களை வகித்தார்.

நரேந்திர மோடி 2014 இல் இந்தியப் பிரதமரான பிறகு, அவர் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார், மேலும் செப்டம்பர் 2017 வரை இந்தப் பதவியில் இருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp uma barathi recived anonymous phone call


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->