பிரபல நடிகர் நின்ற இடத்தை கோமியத்தால் கழுவிய பாஜகவினர்.!! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமா திரையுலகில் பிரபலமான நடிகரான பிரகாஷ்ராஜ் பாஜக மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராக அவ்வப்போது அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்து பதிவிட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். 

இந்தநிலையில் அவர் கர்நாடகாவில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவர் நின்ற இடத்தை கோமியம் ஊற்றி கழுவியது சம்பவம் பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் இணைந்து திரையரங்கு சினிமா சமுதாயம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தனியார் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது. தனியார் அமைப்புகளுக்கு கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பாஜக உறுப்பினர்களும், பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனையும் மீறி தனியார் கல்லூரி நிர்வாகம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கியதால் கல்லூரிக்கு வெளியே பாஜகவினர் மற்றும் பாஜக சார்ந்த மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் இருந்து வெளியே சென்ற பாஜக மாணவர் அமைப்பினர் சிலர் பசு மாட்டின் கோமியத்தைக் கொண்டு அந்த அரங்கை சுத்தம் செய்தனர்‌. இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி பதவி ஏற்பதற்கு முன்பு அம்மாநில சட்டமன்றத்தை காங்கிரஸ் கட்சியினர் கோமியம் கொண்டு சுத்தம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP washed actor Prakashraj was standing place with cow urine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->