மருத்துவமனை குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தை சடலம்: தீவிர விசாரணையில் போலீசார்!
body child lying hospital garbage bin Police investigating
மும்பை, லோக்மன்யா திலக் நகராட்சி மருத்துவமனையில் உள்ள கழிவறை குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
துப்புரவு பணியாளர் ஒருவர் மருத்துவமனையின் கழிவறையின் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது குப்பைத்தொட்டியில் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர் உடனடியாக இது குறித்து பணியில் இருந்த மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் சட்டப்பிரிவு 317 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
body child lying hospital garbage bin Police investigating