வெளிநாட்டில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!
bomb thread to puthuchery governor house
புதுச்சேரி மாநிலத்தில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிப்மர் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. அதற்கு அடுத்த நாள் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், விரிவான சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 14-ந் தேதி மர்ம நபர்கள் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் மோப்பநாய் பிரிவினர் ஆளுநர் மாளிகையில் தீவிர சோதனை நடத்தினர். பின்னர் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது போலி மின்னஞ்சல் என்பது தெரியவந்தது.
இதுவரைக்கும் ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு துணைத்தூதரகம், மாவட்ட ஆட்சியர் அலுவலங்களுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேரடியாக மிரட்டுவதற்கு பதிலாக முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி. அலுவலகங்களுக்கு மிரட்டலை அனுப்பியிருத்தனர்.
ஆனால் இந்த 4 சம்பவங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் டார்க் நெட்டை பயன் படுத்தியதால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்களை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு புதுச்சேரி காவல்துறை மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரத்தில் மின்னஞ்சலை அனுப்பியவர்கள் எல்லை தாண்டிய அதிகார வரம்பைக் கொண்ட கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். அதனால், வெளிநாட்டில் இருந்து மிரட்டல் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
English Summary
bomb thread to puthuchery governor house