நடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்....பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரத்திற்கு  ஏர் இந்தியா விமானம்  சென்று கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திருவனந்தபுரத்தை நெருங்கியபோது, இன்று காலை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக, விமானியால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வானில் பயணித்து கொண்டிருந்த விமானப் பயணிகள்  பீதியடைந்தனர்.  மேலும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும், காலை 8 மணிக்கு பாதுகாப்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

பின்னர் பயணிகள் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமானம் மற்றும் பயணிகளில் பைககளில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் விமான நிலைய போலீசார் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்த விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏர் இந்தியா விமானம், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கம் போல் விமான நிலையம்  செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb threat to Air India flight in mid air What is the status of passengers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->