தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்து துண்டாக்கிய சிறுவன்.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை சிறுவன் திருப்பி கடித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஸ்பூர் மலைவாழ் பகுதியில் கோர்வா பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இது காட்டுப்பகுதி என்பதால் வன உயிரினங்கள் அதிகம் உலாவி வருகின்றன. மேலும் அங்கு அடிக்கடி பலரை பாம்பு கடிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனை பாம்பு ஒன்று கடித்தது. இதில் ஆத்திரமடைந்த அச்சிறுவன் மீண்டும் பாம்பை இருமுறை கடித்து துண்டாக்கியுள்ளான். அதில் அந்தப் பாம்பு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர்களிடம் சிறுவன் நடந்ததை தெரிவித்துள்ளான். அதன்பின்னர் சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர் தற்போது அந்த சிறுவன் நலமாக உள்ளார். ஜாஸ்பூர் மலைவாழ் மக்களிடம் பாம்பு கடித்தால் அதனை திருப்பி கடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boy bit the snake that bit him back


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->