ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தவுசா பகுதி அருகே கலிகாட் கிராமத்தில் கடந்த 9-ந்தேதி வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடந்த சிறுவனை 55 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், நேற்று இரவு 10 மணியளவில் உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட சிறுவன் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது:- "ஆழ்துளையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு உயிர்க்காக்கும் வசதிகளும் செய்யப்பட்டது. இருப்பினும், சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்" என்றுத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died for drowned bore well in rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->