பெரும் சோகம்! வெடி மேல் டம்ளர்போட்டு மூடிய சிறுவன்! டம்ளர் வெடித்து வயிற்றை கிழித்ததில் சிறுவன் பலி! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக சிறுவன் பட்டாசு வெடித்து கொண்டிருக்கும்போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டி20 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஜூன் 29ம் தேதி நடைபெற்றது. அதில் இந்திய அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி 2 வது முறையாக உலக கோப்பையை வென்றது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தீபக் தாகூர் என்ற ஐந்து வயது சிறுவன் பட்டாசு மீது நம்பரை வைத்து வெடித்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக டம்பளர் வெடித்து சிதறியதில் அதில் துகள்கள் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த சிறுவன் வயிற்றில் புதியதாக கூறப்படுகிறது.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை ஆம்புலன்ஸ் தவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோஹல்பூர் காவல் நிலைய அதிகாரி பிரதிக்ஷா மார்பு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டி20 உலக கோப்பை இந்தியா வெற்றி வெற்றி பெற்றதை கொண்டாடிய சிறுவன் வெடி வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died while bursting firecrackers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->