காதலிக்கு தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை பிளான் போட்டு தூக்கிய காதலன்.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் பச்பேடி அரசு பள்ளியில் பிரதீப் ஸ்ரீவஸ்தவா (வயது 61) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் டிசம்பர் 15ஆம் தேதி நள்ளிரவில் தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து சென்றார்.

இதனையடுத்து தலைமை ஆசிரியர் வீட்டின் வாயிலுக்கு சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அதன்பின் அந்த வாலிபர் தலைமை ஆசிரியரை சுத்தியல், கத்தி போன்றவற்றால் கொடூரமாக தாக்கி இருக்கிறார். 

இதனால் தலைமை ஆசிரியர் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த‌ போலீசார் விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியரை கொலை செய்த வாலிபரை கைது செய்தனர். 

அதனைத்தொடர்ந்து வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் உபேந்திர கெளசிக் என தெரியவந்தது. மேலும், நடத்திய விசாரணையில் தலைமை ஆசிரியராக இருந்த பிரதீப், அவரிடம் படிக்கும் தன் காதலியை துன்புறுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவரை கொலை செய்ததாகவும் வாலிபர் ஒப்புக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy friend killed girl friend head master


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->