மொத்தம் 750 மாணவர்கள்... இன்று நடந்த நீட் மறு தேர்விலும் அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


இன்று நடத்தப்பட்ட 1,563 மாணவர்களுக்காக நீட் இளங்கலை மறு தேர்வில் 750 பேர் (48% பேர் ஆப்சென்ட்) தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மேகாலயாவில் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட 1,563 மாணவர்களுக்காக நீட் மறு தேர்வில் 750 பேர் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

செய்தி விரிவாக்கம் மற்றும் பின்னணி :

கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவம் பயில்வதற்கான நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகளிலும் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

குறிப்பாக இதுவரை இல்லாத அளவு ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றதும், சிலருக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது, நீட் தேர்வு நடத்தப்படும் முறை மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கின. மேலும், தேர்வு நாளில் இதோடு வினாத்தாள் கசிவு குறித்த புகாரும் எழுந்தது. 

இதுகுறித்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றத்தில், நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவிக்கவே. அதன்படி, இன்று மறுதேர்வு நடந்ததும், இதில் 750 பேர் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Breaking News NEET 2024 ReExam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->