கோடி கணக்கில் லஞ்சம்! அமலாக்கத் துறை உதவி இயக்குநா் மீது சிபிஐ வழக்கு! - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான தொழிலதிபர் அமன்தீப் தாலிடம், கலால் கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் கத்திரி மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணையின் போது மூத்த அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி வழக்கில் இடையூறு ஏற்படுத்த துறையில் லஞ்சம் பரிமாற்றம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் மதுபான தொழிலதிபர் அமன்தீப் தால், கலால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ரூ. 5 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரியவந்தது. 

இதனால் அமன்தீப் தால் கடந்த மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டார். இது குறித்து கடந்த ஜூலை 4 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 2.19 கோடி மற்றும் வழக்கின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 120-பி பிரிவின் கீழ் அமலாக்கத்துறை அளித்த புகாரின் பெயரில் சிபிஐ, அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் கத்திரி மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 

மேலும் இந்த வழக்கில் மதுபான தொழிலதிபர், அவரது தந்தை, அலுவலக எழுத்தாளர், பட்டைய கணக்காளர், இந்தியா நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் என பலர் இணைக்கப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கு பதிவை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bribery case CBI against Assistant Director of Enforcement Department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->