நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த புதிய பாலம் - தொழிலாளர்களின் நிலை என்ன?                                               - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டம் குர்சா காந்தா மற்றும் சிக்டி பகுதிகளை இணைக்கும் வகையில் பக்ரா ஆற்றின் மீது புதிதாக  பாலம் ஒன்று கட்டப்பட்டது. ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் கட்டுமான பணிகள் முடிந்துவிட்டபோதிலும் பாலத்தின் அணுகு சாலைகள் அமைக்கப்படாததால் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த புதிய பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழப்போ? அல்லது யாருக்கும் காயமோ? ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. சம்பவத்தின் போது கட்டுமான தொழிலாளர்கள் பணியில் இருந்தார்களா? என்கிற தகவலும் வெளியாக வில்லை.

இதற்கிடையே நொடிப்பொழுதில் பாலம் இடிந்து ஆற்றில் விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம், சுபால் மாவட்டத்தில் கோசி ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து, ஒருவர் பலியானதுடன், 10 பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bridge collapse in bihar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->