10 நாட்களில் இடிந்து விழுந்த 4வது பாலம் !! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று பாலத்தின் ஒரு பகுதி குழிந்து விழுந்தது, இது கடந்த 10 நாட்களில் மாநிலத்தில் நான்காவது சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் பான்ஸ்பரி ஷ்ரவன் சௌக் அருகே மரியா ஆற்றின் கிளை நதியில் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், சமீபத்தில் பெய்த கனமழையின் தாக்கத்தில் 70 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாலங்கள் பாலம் இடிந்து விழும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு பீகார் மாநில ஊரகப் பணித் துறை இந்தப் பாலத்தைக் கட்டியது. மேலும், பஹதுர்கஞ்ச் தொகுதியில் அமைந்துள்ள பாலம் 70 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டது. கன்கை நதியை மஹாநந்தாவுடன் இணைக்கும் சிறிய துணை நதியான மடியா மீது 2011 ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. 

நேபாளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் நீர்மட்டம் திடீரென உயர்ந்துள்ளது. பாலத்தின் ஒரு தூண் வலுவான நீரோட்டத்தை தாக்குப்பிடிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் பாலத்தின் கட்டுமானத்தில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேபோல் கடந்த ஜூன் 23 ஆம் தேதி அன்று, கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கோரசஹான் பிளாக் பகுதியின் கீழ் கட்டுமானத்தில் இருந்த ஒரு சிறிய பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், கடந்த ஜூன் 22 ஆம் தேதி அன்று சிவான் மாவட்டத்தில் ஒரு சிறிய பாலம் இடிந்து விழுந்தது. 

மேலும் கடந்த ஜூன் 18 ஆம் தேதி அன்று, அராரியா மாவட்டத்தில் புதிதாக 12 கோடி செலவில் கட்டப்பட்ட சுமார் 180 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் மதகுகள் குறித்த நிலை அறிக்கை பெறுவதற்காக மாநில அரசின் ஊரகப் பணித் துறையினர் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

மாநிலத்தில் அடிக்கடி நடக்கும் பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சித்தனர். மேலும் பாலங்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bridge collapse in Bihar state


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->