காதல் திருமணம் செய்த வாலிபர்... வீட்டிற்கு தீ வைத்த பெண்ணின் சகோதரர்.!
brother of the girl who set fire to the house of the boy who got married for love in Telangana
தெலுங்கானா மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் வீட்டிற்கு மணமகள் குடும்பத்தினர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஹுசூராபாத் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால், இருவரும் வெமல்வாரா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் சஞ்சனாவின் தம்பி பாலையா ராஜசேகரின் வீட்டிற்கு நண்பர்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ராஜசேகரின் வீட்டை பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.
இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகர் வீட்டிற்கு தீ வைத்த சஞ்சனாவின் தம்பியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
brother of the girl who set fire to the house of the boy who got married for love in Telangana