பஞ்சாப் எல்லையில் பறந்த ட்ரோன்.! சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்!
BSF shoots down Pakistan drone in Punjab Border
பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் எல்லை பகுதியில் நேற்று முன்தின இரவு 7:20 மணியளவில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று காலை தேடுதல் வேட்டை நடத்தியபோது, இந்திய எல்லையான பரோபாலுக்கு எதிரே பாகிஸ்தான் எல்லைக்குள் 20 மீட்டர் தொலைவில் ட்ரோன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அதை பாகிஸ்தான் வீரா்கள் எடுத்துச் சென்றனர் என்று பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் அதே எல்லையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியளவில், ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய வயலில் இருந்து 25 கிலோ ஹெராயினை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை வேலியின் இருபுறமும் இந்த நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டதைடுத்து இந்திய துருப்புக்கள் உஷார்படுத்தப்பட்டன.
English Summary
BSF shoots down Pakistan drone in Punjab Border