அதிரடி தீர்ப்பு.. பதவி இழக்கும் மேலும் ஒரு எம்.பி..!! கொலை வழக்கில் 4 ஆண்டுகள் சிறை..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் பொழுது மோடி சமுதாயம் குறித்து அவதூறு பேசிய வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அவர் தனது வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்சல் அன்சாரி ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் சூழல் உண்டாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணகாந்த் ராய் என்பவரை கடந்த 2005 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடியும் அரசியல்வாதியமான முக்தர் அன்சாரி மற்றும் அவருடைய சகோதரர் அப்சல் அன்சாரி எம்.பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முக்தர் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதித்தது. அதேபோன்று அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்சல் அன்சாரி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP MP AfzalAnsari loses his MP post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->