பட்ஜெட் தொடர் 2024-25: மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாளை காலை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். சுமார் 57 நிமிடங்கள் நிதி அமைச்சர் பட்ஜெட்டின் மீது உரையாடினார். 

இதனை அடுத்து நிதி மசோதா 2024, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் மக்களவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு பொறுப்பேற்கும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பதால், இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Budget 2024 Lok Sabha adjourned till tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->