பட்ஜெட்டில் விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு... மத்திய அரசுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு!
Budget allocates more funds for space sector ISRO chief lauds govt
மத்திய பட்ஜெட்டில் இந்திய விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என இஸ்ரோ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட விஞ்ஞானி நாராயணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளையை சேர்ந்தவர் விஞ்ஞானி நாராயணன்,இவர் சமீபத்தில் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்தநிலையில் விஞ்ஞானி நாராயணன் சொந்த கிராமத்தில் அவருக்கு நேற்று மாலையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது விழாவில் பங்கேற்க இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று மதியம் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.
அப்போது முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது விஞ்ஞானி நாராயணன் கூறியதாவது:-
இந்திய விண்வெளி துறையின் 100-வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது என்றும் இந்த சாதனையானது நாட்டிற்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும் என்றும் ஒவ்வொரு இந்தியனும் இதை நினைத்து மகிழ்ச்சி அடையும் தருணம் இது என கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசிய விஞ்ஞானி நாராயணன்,இஸ்ரோவில் உள்ள அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது என்றும் நாட்டில் பாமர மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது என்றும் மத்திய பட்ஜெட்டில் இந்திய விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என இவ்வாறு விஞ்ஞானி நாராயணன் கூறினார்.
English Summary
Budget allocates more funds for space sector ISRO chief lauds govt