தொகுதி மறுவரையறை: நியாயமான தீர்வே வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
CM MK Stalin Fair Delimitation
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படலாம் என்ற தகவலால் தென் மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதன் மூலம் தென்மாநிலங்களின் பாராளுமன்ற தொகுதிகள் குறையலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
"வட மாநிலங்களின் மக்கள் தொகை அதிகரிப்பை அரசியல் ஆயுதமாக மாற்ற முடியாது. தென் மாநிலங்கள் வளர்ச்சி சார்ந்த முனைப்புடன் செயல்பட்டுள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும் திட்டம் கூட்டாட்சி நியாயத்தைக் கேள்விக்குறியாக்கும்.
நாங்கள் நியாயமான தொகுதி மறுவரையறையை மட்டுமே ஏற்கக் கடமைப்பட்டுள்ளோம். தென் மாநிலங்களை புறக்கணிக்கும்படியான எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது!" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
CM MK Stalin Fair Delimitation