மக்களே பயன்படுத்திக்கங்க! தொலைந்த மற்றும் திருடுபோன செல்போன்களை மீட்க புதிய இணையதளம்!
Railway Mobile missing site announce
ரயில்களில் தொலைந்துபோன செல்போன்களை மீட்க ரயில்வே பாதுகாப்புப் படை புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதற்காக, ரயில் மடாத் செயலி அல்லது 139 உதவி மைய எணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
மேலும், செல்போன் திருட்டை தடுக்கும் மற்றும் தொலைந்த போன்களை மீட்க "CEIR" (Central Equipment Identity Register) இணையதளம் பயன்படுகிறது. இந்த தளம்,
தொலைந்த செல்போன்களை பதிவுசெய்து பிளாக் செய்ய உதவுகிறது.
ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணின் மூலம் கண்காணிக்க முடியும்.
மறுவிற்பனை செய்யப்படுவதை தடுக்கவும், சட்டவிரோதமாக வைத்திருப்பதை கண்டுபிடிக்கவும் உதவுகிறது.
தொலைந்த செல்போனின் விவரங்களை இந்த தளத்தில் பதிவு செய்தால், அந்த செல்போனின் ஐஎம்இஐ எண்ணை காவல்துறை பிளாக் செய்யும்.
புதிய சிம் சேர்த்தால், அந்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்படும்.
செல்போன் புதியவரின் வசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உரியவரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்படும்.
ஒப்படைக்க மறுத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுத்து, உரியவருக்கு செல்போன் வழங்கப்படும்.
English Summary
Railway Mobile missing site announce