மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி - சி.ஏ தேர்வு முறையில் மாற்றம்..!
ca exam method change
இந்திய தணிக்கை துறை மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில் சி.ஏ., தேர்வு முறையில் மாற்றம் செய்துள்ளது. சி.ஏ தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் உள்ளிட்ட மூன்று மாதங்களில் நடத்தப்படும். இதேபோல், ஜூன் மற்றும் டிசம்பர் உள்ளிட்ட மாதங்களில் இரண்டு முறை நடத்தப்படும் இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட் என்ற தேர்வு இனி பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மாதங்கள் என்று ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்.
மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில் 26-வது கவுன்சில் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது.