இந்திய பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கனடா..! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர்கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்திய ராணுவம் மற்றும் போலீசார்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால் பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Canada has warned its citizens to avoid traveling to India


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->