கிரெடிட் கார்டை பயன்படுத்தி யுபிஐ முறையில் பணம் செலுத்தும் புதிய வழி- எந்த வங்கியில் தெரியுமா?
canara bank launch credit card on UPI
கிரெடிட் கார்டை பயன்படுத்தி யுபிஐ முறையில் பணம் செலுத்தும் புதிய வழி - எந்த வங்கியில் தெரியுமா?
இந்திய வங்கிகள் மூலம் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள் வழக்கமாக மாஸ்டர், வீசா என்று பன்னாட்டு நிறுவனங்களிலேயே பயன்பாட்டில் உள்ளன. அதேபோல், இந்திய பின்னணியிலான ரூபே மூலம் வழங்கப்படும் டெபிட் கார்டுகளை வழங்கி வந்த கனரா வங்கி, கிரெடிட் கார்டு வசதியையும் ரூபே மூலமே வழங்குகிறது.
இதைத்தொடர்ந்து, கனரா வங்கி யுபிஐ முறையில் பணம் செலுத்துவதற்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த வசதியை கொண்டுவரும் முதல் பொதுத்துறை வங்கி என்றால் அதுவும் கனரா ஆகும்.
கனரா வங்கியின் கிரெடிட் கார்டுகள் வழக்கமான வர்த்தக பயன்பாடுகள், பொருட்கள் வாங்குவது, உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட தேவைகளுக்கு, இனி யுபிஐ முறையில் பணம் செலுத்துவதற்கு உபயோகமாகும்.
பயனர்கள் வங்கியின் செயலி வழி உபயோகம் போலவே இந்த கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் மேற்கொள்ளலாம். இந்த வசதியை அணுக வங்கியின் ‘கனரா ஏஐ1’ செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்துக் கொள்வது அவசியம்.
English Summary
canara bank launch credit card on UPI