பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹேக்கர்கள், ஹேக் செய்யப்பட்ட அரசு வங்கியின் X கணக்கு !! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஒரு பொதுத்துறை அரசு வங்கியான கனரா வங்கியின் சமூக வலைத்தள X கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது,  இதைப் பற்றிய தகவலை அந்த நிறுவனமே தெரிவித்தது. அந்த வங்கியின் அதிகாரப்பூர்வமான X பக்கமான @CanaraBank_X ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த ஹேக்கர் அந்த அதிகாரபூர்வ வங்கியின் பெயரை 'ether.fi' என மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கனரா வங்கியின் அதன் அதிகாரப்பூர்வ X கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அடுத்து, கனரா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தங்கள் வாடிக்கையாளர்கள் எதையும் வெளியிட வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த ஹேக் செய்யப்பட்ட X கணக்குபக்கம் மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வந்ததும், அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கனரா வங்கி தெரிவித்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் மேலும் கடந்த வாரம் இதேபோல் ஆக்சிஸ் வங்கியிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அதன் பின்னர் ஹேக்கர்கள் ஆக்சிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ X பக்கத்தை ஹேக் செய்தனர். அந்த ஹேக்கர்கள் அதிகாரப்பூர்வ வங்கியின் கணக்கின் பெயரை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு புள்ளி வைத்துள்ளார். இதனுடன் மேலும் அந்த ஹேக்கர்கள் கிரிப்டோகரன்சி தொடர்பான அங்கீகரிக்கப்படாத இடுகைகளையும் வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனரா வங்கி கடந்த 1906 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரில் அம்மேம்பாள் சுப்பா ராவ் பாய் என்பவரால் தொடங்கப்பட்டது. மேலும் பல ஆண்டுகளாக கனரா வங்கி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 13 துணை நிறுவனங்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட நிறுவனங்களுடன் ஒரு பெரிய நிதிக் குழுவாக வளர்ந்துள்ளது. இந்த வருடம் மார்ச் நிதி ஆண்டு நிலவரப்படி, கனரா வங்கி அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9,604 கிளைகள் மற்றும் 12,155 ஏடிஎம்கள் மூலம் 11.17 கோடி மக்களுக்கு சேவை செய்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

canara bank twitter account has been hacked


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->