பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்! - Seithipunal
Seithipunal


இரவில் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசிடம் மதுபோதையில் தகாத முறையில் நடந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலியே பயிரை மேய்கின்ற சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.பள்ளி ,கல்லூரி,அலுவலகங்கள்,காவல்நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு   இன்றும் சக பணியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்துவருவது தொடர்கதையாகிவருகிறது.அப்படி ஒருசம்பவம்  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நிகழ்துள்ளது காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார் . இவர் தற்போது ராஜபாளையத்தில், மலையடிப்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். மோகன்ராஜூவுக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவில் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசிடம் மதுபோதையில் தகாத முறையில் நடந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக மோகன்ராஜூ மீது புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கும் தகவல் வந்ததையடுத்து .

உடனடியாக அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன், மோகன்ராஜை ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்தார். மேலும் தீவிர விசாரணைக்கு பின்னர் மோகன்ராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது மேல்நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual harassment of female cop Special Sub-Inspector transferred to Armed Forces


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->