ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்து - மத்திய அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதன்படி, சட்ட விதிமுறை மீறல்கள் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழு அமைத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும் உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cancellation of license of Rajiv Gandhi Foundation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->