கார் மீது லாரி நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து.. 2 பேர் பலி ..3 பேர் படுகாயம்.!
Car and lorry accident 2 death and 3 injured
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிலிருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள சூரஜ்பூர் மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாரா சோதனைச் சாவடிக்கு அருகில் லாரி மற்றும் கார் மோதி கொடூர விபத்துக்குள்ளானது.
துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் கார் சோதனைச் சாவடி தடுப்புச் சுவரை அடைந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர விபத்தில் காரில் இருந்த சபாபதி யாதவ் மற்றும் ஹரேந்திர யாதவ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், வீரேந்திரா, ராஜேந்திரா மற்றும் ராகேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக அம்பிகாபூர் நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
English Summary
Car and lorry accident 2 death and 3 injured