உத்தரகாண்டில் கோர விபத்து: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பெண்கள் உட்பட 12 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பல்லா ஜாக்கோல் என்ற பகுதிக்கு நேற்று மாலை 17 பேர் ஒரே காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் காருக்குள் நெருக்கி அமர்ந்திருந்ததுடன், அதன் மேல் பகுதியிலும் 5 பேர் அமர்ந்து சென்றுள்ளனர்.

அப்பொழுது ஜோஷிமாத் பகுதியில் உர்காம் மலைச்சாலையில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. 

மேலும் காரில் சென்ற இரண்டு பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து மீதமுள்ள 2 பேர் கார் கவிழப்போன கடைசி வினாடியில் அதிலிருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car overturned in the ditch in uttarakhand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->