தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா: ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
Case against Kerala Governor in Supreme Court
கேரள மாநில அரசுக்கும் கேரள ஆளுநருக்கும் இடையே சில வருடங்களாக மோதல் போக்கு இருந்து வந்ததால் ஆளுநர் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தினார்.
இந்நிலையில் கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆரிப் முகம்மதுகானுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது, 8 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/court 01.jpg)
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதவை நிலுவையில் வைத்துள்ளதாக தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுபோல் பஞ்சாப் மாநில அரசும் அந்த மாநில ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Case against Kerala Governor in Supreme Court