இரண்டு நாள் பயணமாக அமெரிக்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடி..!
Prime Minister Narendra Modi is on a two day visit to the US
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 12-ந்தேதி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார். குறித்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மோடி சந்திக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பிரதமர் மோடியின் இந்த பயணம் இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவுக்கு மேலும் உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக வருகிற 10-ந்தேதி பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கிக்கவுள்ளதோடு, பாரிசில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.
English Summary
Prime Minister Narendra Modi is on a two day visit to the US