டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிரடி!
Vanthitha Panday IPS posting Central Govt
திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக, அவர் உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார்.
மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் அல்லது புதிய அறிவிப்பு வரும் வரை, மத்திய அரசின் பதவியில் தொடருவார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்திதா பாண்டேவின் கணவர் வருண்குமார் திருச்சி சரக டிஐஜியாக உள்ளார். வருண்குமார் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், நாம் தமிழர் கட்சியினருடன் மோதல் போக்கில் உள்ளதாகவும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டது அரசியல் காரணம் எதுவும் இல்லை. அவரே மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்து உள்ளார். அந்த தற்போது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உள்துறை அமைச்சகம் அவரை மத்திய பணிக்கு மாற்றியுள்ளது.
English Summary
Vanthitha Panday IPS posting Central Govt