டிரோன் மருந்து தெளிக்க பயற்சி! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!
TNGOvt Farmers Drone Training
கிராமப்புறங்களில் வேலையாட்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், டிரோன் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் மருந்து தெளிக்க முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பு அம்சம். மேலும், வழக்கமான மருந்து தெளிக்கும் முறையை விட டிரோன் பயன்பாடு தண்ணீரின் அளவைக் குறைக்கிறது,
சாகுபடி செலவைக் குறைக்கிறது மற்றும் விவசாயிகளின் பணிச்சுமையைக் குறைக்கிறது. இதனால் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும்.மகளிர் சுய உதவிக் குழுக்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கத்துடன், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து டிரோன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
முதற்கட்டமாக 28 மாவட்டங்களைச் சேர்ந்த 44 பெண்களுக்கு டிரோன் இயக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, உரிமத்துடன் டிரோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்களது பயிர்களைப் பாதுகாக்க டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் சேவையைப் பெறலாம். பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினரைத் தொடர்பு கொண்டு இந்த சேவையைப் பெறலாம். டிரோன் இயக்குவதற்கான பயிற்சி பெற்ற சுய உதவிக் குழு மகளிர் பற்றிய விவரங்கள் உழவர் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
English Summary
TNGOvt Farmers Drone Training