குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 52 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் என்ற நபர் போலீசில் சரணடைந்துள்ள நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மார்ட்டின் என்பது உறுதிசெய்யப்பட்டது.

அவரிடம் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதாவது, உபா சட்டத்தின் கீழ் பிரிவு 16 (1ஏ) மற்றும், இந்திய தண்டனை சட்டம் 302, 307 மற்றும் 3 பிரிவு ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on martin for kerala bomb blast issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->