காதலனுடன் பேசுவதைத் தவிர்த்த கல்லூரி மாணவி - ஆத்திரத்தில் சரமாரியாகத் தாக்கிய சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


காதலனுடன் பேசுவதைத் தவிர்த்த கல்லூரி மாணவி - ஆத்திரத்தில் சரமாரியாகத் தாக்கிய சம்பவம்.!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே காதலனின் நடவடிக்கைகள் அந்த மாணவிக்கு பிடிக்காமல் போனதால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த மாணவி காதலனுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவர், மாணவி வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அவரிடம் ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய்? நீதான் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இந்த வாக்குவாதம் முற்றியதால் அந்த மாணவர், மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து தலையை தரையில் தாக்கினார். இதைபார்த்த சக மாணவர்கள் அவரை தடுத்து நிறுத்து மாணவியை மீட்டனர்.

இந்தத் தாக்குதலில் மாணவியின் பின் தலையில் காயம் ஏற்பட்டதால் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து தகவலறிந்த கிணத்துக்கடவு போலீசார், மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on young man for attack girl friend in coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->