வேங்கைவயல் விவகாரம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது. வேங்கைவயல் கிராமம், காவிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் வேங்கைவயல் கிராம ஊராட்சி மன்ற தலைவர் உட்பட பலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்தான வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் இந்த சம்பவம் தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case in Supreme Court seeking CBI probe in Vengaivyal case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->