தேர்தலில் பண பட்டுவாடா...பாஜக மீது கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய உள்ள நிலையில், பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெறஉள்ளது .இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.மேலும் பிரச்சாரத்தில்  கட்சிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்று வைக்கும் குற்றச்சாட்டுகளால் பிரசார கூட்டங்களில் அனல் பறக்கிறது. இந்த பிரசாரம் இன்று திங்கட்கிழமை மாலையுடன் ஓய்கிறது. ஆகவே தலைநகர் டெல்லி முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது.மேலும் அங்கு  பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் . மேலும் கெஜ்ரிவால் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:- பாஜக தனது குண்டர்களையும், டெல்லி போலீசாரையும் பயன்படுத்தும் என்றும்  வாக்காளர்களை அச்சுறுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றும்  குறிப்பாக குடிசைப்பகுதிகளில் உள்ள மக்களை அச்சுறுத்துகிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் குடிசைப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து விரலில் மை வைத்து விடுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ள கெஜ்ரிவால் அவர்கள் வாக்களிக்க முடியாதபடி இப்படி செய்கிறார்கள் என்றும்  எனவே, மக்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், விரலில் வைக்க விடாதீர்கள்" என வேண்டுகோள்விடுத்துள்ளார்.

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய உள்ள நிலையில், பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cash in the election... Kejriwal slams BJP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->