இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் அதிகாரி சி.பி.முத்தம்மா பிறந்த தினம்.!!
CB Muthamma birthday 2022
சி.பி.முத்தம்மா :
இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் அதிகாரி சி.பி.முத்தம்மா 1924ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்தார்.
இவர் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆண், பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடு, தனித்தனி விதிமுறைகள் என சட்டப் பிரிவில் கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. இந்த பாலினப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முத்தம்மா.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் இந்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது என்று அறிவித்து, இவர் பதவி உயர்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்றும் தீர்ப்பு கூறினார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு சட்டத்தை திருத்தி எழுத ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இவர் நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். 33 ஆண்டு அரசுப் பணிக்குப் பிறகு, 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
CB Muthamma birthday 2022