நீட் முறையீடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - மல்லிகார்ஜுன கார்கே!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை வேடித்த நிலையில்,நீட் முறையீடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு குறித்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. நீட் தேர்வு எழுதியவர்களில் 1563 பெருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் 720 க்கு 720 என்ற முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரே கல்வி மையத்தில் தேர்வு எழுதிய ஏழு பேர் முழு மதிப்பெண்களை பெற்றிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நீட் தேர்வு கண்டித்து பல்வேறு பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வு சர்ச்சை விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்த நான்கு பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நீட் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன தனது சமூக வலைதளபக்கமான எக்ஸ் தளத்தில் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது மற்றும் பிரச்சனை கிடையாது. இது தவிர பல்வேறு முறை கேடுகளும் வினாத்தாள் கசிவுகளும், ஊழல்களும் நடந்துள்ளன. நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். மோடி அரசு சிபிஐ விசாரணைக்கு தயாராக இல்லை என்றால் உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் இணையான விசாரணையை நடத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI probe needed in NEET appeal case Mallikarjuna Kharge


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->