பட்ஜெட் 2023 : செல்போன் மற்றும் டிவி விலை குறைப்பு? - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று ஆட்சி அமைத்த நிலையில் கடைசி முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன்படி இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் 2023-2024 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை மொத்தம் உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவிகிதமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு சில பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது. அதன்படி குறிப்பிட்ட சில செல்போன் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி குறைக்கப்படுகிறது.

மேலும், மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி இறக்குமதிக்கு வரிசையில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன் காரணமாக, செல்போன், டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cellphone and tv import tax reduce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->