தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு முன்னுரிமை.. மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்..!! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும், 10 மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கும் தயாராகும் வகையில் அமைச்சரவையில் மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக ஜனவரி 15 முதல் 25ஆம் தேதிக்குள் அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்க்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அதன்படி தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் இந்த வருடம் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலங்களில் இருந்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

மேலும் அமைச்சரவையில் செயல்படாதவர்களை நீக்கிவிட்டு கட்சியில் சிறப்பாக செயல்படும் 4 முதல் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவி வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் குறிப்பாக தெலுங்கானா மற்றும் குஜராத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. மேலும் அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு பாஜக தேசியத் தலைவர் பதவியில் ஜே.பி நட்டா தொடர்வது குறித்து கட்சி முடிவெடுக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central BJP govt has decided to reshuffle the cabinet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->