நிலக்கரியை எரிவாயுவாக மாற்றும் திட்டங்களுக்கு 15% மானியம்.!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!! - Seithipunal
Seithipunal


நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியை எரிவாயுவாக மாற்றும் திட்டங்களை ஊக்குவிக்க ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மூன்று பிரிவுகளின் கீழ் ஊக்கத்தொகை அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பிரிவில், அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ. 4,050 கோடி ஒதுக்கீட்டில் 3 திட்டங்களுக்கு ஒட்டு மொத்த மானியமாக ரூ. 1,350 கோடி அல்லது மூலதனத்தில் 15 சதவீதம் வழங்கப்படும்.

இரண்டாவது பிரிவில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்களுக்கு ரூ.3,850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒட்டுமொத்தமாக ரூ.1,000 கோடி அல்லது மூலதனத்தில் 15 சதவீதமாகும். குறைந்தபட்சம் ஒரு திட்டமாவது கட்டண அடிப்படையிலான ஏல முறையில் ஏலம் விடப்படும், அதன் அளவுகோல் நிதி ஆயோக்குடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. உள்நாட்டு செயல்விளக்கத் திட்டங்கள் அல்லது சிறிய அளவிலான உற்பத்தி அடிப்படையிலான எரிவாயுவாக்கும் ஆலைகளுக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் குறைந்தபட்சம் ரூ.100 கோடி மூலதன செலவு, மூலதனத்தில் 15 சதவீதம், இரண்டில் ஒன்று வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Cabinet approval 15 percentage subsidy for coal to gas projects


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->