5ஜி சேவையில் குளறுபடி - மத்திய தொலைத் தொடர்புத்துறை சம்மன்..!
Central Department of Telecommunication Summons for 5G service
5ஜி சேவையை இந்தியாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இன்னும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான மென்பொருள் அப்டேட் அளிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, மத்திய தொலைதொடர்பு துறை செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், "மத்திய தொலை தொடர்பு துறையால் புதன்கிழமை நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், தொலை தொடர்பு செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் 5ஜி அதிவேக இணையதள சேவையை செல்போன்களில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
English Summary
Central Department of Telecommunication Summons for 5G service