4 வடகிழக்கு மாநிலங்களின் சாலை திட்ட பணிகளுக்கு ரூ.68,000 கோடி.! மத்திய அரசு ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


4 வடகிழக்கு மாநிலங்களின் சாலை திட்ட பணிகளுக்கு ரூ.68 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

வரும் 2024-ம் ஆண்டுக்குள் வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த சாலை போக்குவரத்தின் நிலைமையை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம் என்றும், இந்த பகுதியில் சர்வதேச தரத்திலான சாலைகளை அமைப்பது என்ற இலக்குகளை கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மண்டலங்களில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மறுஆய்வு செய்து, அதனை தொடர்ந்து புதிய சாலை திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. 

இதில் அசாமுக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், மேகாலயாவுக்கு ரூ.9 ஆயிரம் கோடியும், நாகலாந்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி மற்றும் சிக்கிமுக்கு ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்குவதற்கு மத்திய அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government approves 68000 crore for road projects in 4 northeastern states


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->