உள்நாட்டுச் சந்தையில் உயரும் விலை.! கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போரினால் உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதி தடைப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கோதுமைக்கான தேவை அதிகரித்ததால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை மாவு 200% அதிகரித்துள்ளது.

மேலும் உள்நாட்டு உற்பத்தியில் குறைவு மற்றும் தனியார் வர்த்தககர்களால் கோதுமை ஏற்றுமதி அதிகரித்ததை தொடர்ந்து உள்நாட்டு சந்தையில் கோதுமை மாவின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு சந்தைகளில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேலும் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நலிவடைந்த சமூகத்தினருக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government bans export of wheat flour


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->