சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அஞ்சல் துறையில் நடைமுறையில் இருக்கும் மத்திய அரசின் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு, ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றி வருகிறது.

இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டின் 3ஆம் காலாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வட்டி விகிதங்களை மத்திய நிதி அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. இதன்படி 3 ஆண்டுகள் சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டு 5.8 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 0.2 சதவீதம் உயர்த்தப்பட்டு 7.6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கான கடன் வட்டி விகிதமும், திருப்பி செலுத்துவதற்கான காலநிலையும் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்திலிருந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்திய நிலையில், முதலீட்டிற்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government increase the interest Rate of small savings schemes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->