குறைகிறது விலை... இல்லத்தரசிகளுக்கு மத்திய அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி! - Seithipunal
Seithipunal


துவரை, கடலை மற்றும் உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளின் விலை ஜூலை மாதத்தில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பருவமழை மற்றும் இறக்குமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பருப்பு வகைகளின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஆறு மாதமாக துவரை பருப்பு, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்ற மூன்று வகை பருப்புகளின் விலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. 

இருப்பினும் அவற்றின் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. பருவமழை காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சந்தையில் விலையேற்றம் இருக்கும் என்பதால் பயிர் சாகுபடிக்கான பரப்பளவை விவசாயிகள் அதிகப்படுத்துவர். இதே போல் உள்நாட்டு இருப்பு மற்றும் சிலரை விலையில் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது. 

அதிகமான பருவமழை மற்றும் இறக்குமதி அதிகரிப்பு காரணங்களும் பருப்பு வகைகளின் விலை ஜூலை மாதத்தில் குறையும் என எதிர்பார்க்கிறது என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government information pulses price decrease


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->