பேச்சுவார்த்தைக்கு தயார் மல்யுத்த வீரர்களுக்கு மத்திய அரசு அழைப்பு.!
Central government invites wrestlers ready for negotiations
தேசிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தங்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள மல்யுத்த வீரனனைகள் அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தப் போராட்டத்திற்கு அரசு கவனம் செலுத்தாததால் வீராங்கனைகள் வென்று குவித்த பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்து மல்யுத்த வீரர்களின் ஹரித்வார் சென்றனர்.
அங்கு விரைந்த விவசாய அமைப்பினர் மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதக்கங்களை வீச வேண்டாம் என வலியுறுத்தினர். மேலும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு விவசாய அமைப்பு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
விவசாய அமைப்பின் கோரிக்கை ஏற்று பதக்கங்களை வீசும் போராட்டத்தை மகிழ்வித்து வீராங்கனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க 5 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து பிரிஜ் பூஷன் சிங்கருக்கு எதிராக இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். மேலும் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் பிரிஜ் பூஷன் சிங் தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கவும் தயார் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் "பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்ச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Central government invites wrestlers ready for negotiations