இனி வாட்ஸ் அப் மூலம் அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம்.. மத்திய அரசு அறிவிப்பு.!
Central govt all certificate get in WhatsApp
கல்விச் சான்றிதழ் ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலியை வழங்கி வருகிறது.
இந்தநிலையில் அச்செயலை வழங்கும் சேவைகளை இனி வாட்ஸ் அப் மூலமாக மே பொதுமக்கள் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, சீரான நிர்வாகத்தை உறுதி செய்யும் நோக்கில் சேவைகள் இணையவழியில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி செயலியில் பான் கார்டு ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு சான்றிதழ் காப்பீடு சான்றிதழ் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைத்துக்கொள்ள முடியும்.
மற்றவைகளை வாட்ஸ்அப் மூலம் பெற 9013151515 என்ற எண்ணுக்கு ‘Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலமாக அரசின் சேவைகளை மக்கள் எளிதில் பெற்றுவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Central govt all certificate get in WhatsApp