ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 4 லட்சம் கடனா? - உண்மை என்ன? மத்திய அரசு தரப்பில் விளக்கம்! - Seithipunal
Seithipunal


சமீபத்தில், மத்திய அரசு ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைத்து மக்களுக்கும் 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குகிறது என்ற தகவல் வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. 

இது குறித்து மத்திய தகவல் பணியகம் தெரிவித்ததாவது, "இந்தத் தகவல் தவறானது என்றும், இது போன்ற தவறான தகவல்களையோ செய்திகளையோ மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும், இந்த தவறான செய்தியை நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேபோன்று, கடந்த ஆகஸ்ட் மாதமும் தவறான செய்தி பரப்பட்டதாகவும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் என்று எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றும் மத்திய தகவல் பணியகம் குறிப்பிட்டுள்ளது. 

இதேபோல், மத்திய அரசின் துணைச் செயலர் நிர்மலா தேவ் கையொப்பத்துடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் தவணை அகவிலைப்படி ஜூலை மாதம் 1 ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஒரு போலியான சுற்றறிக்கை வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டுள்ளது. ஆனால், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளதாகவும் மத்திய தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt allounce 4 lakhs loan to aadhar card Central Information Bureau answer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->