இந்தியாவிற்கு புறப்படும் முன்பே RT-PCR பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


உலக நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் RT-PCR எனப்படும் கொரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனை புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ்களை ஏர் சுவேதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருவதால் இந்தியாவிலும் பரவ வாய்ப்புள்ளதாக மத்திய அரசு மாநில அரசுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் அடுத்த 40 நாட்களுக்கு இந்தியாவில் உள்ள அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய கொரோனா பரவல் வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central govt announced RT PCR test mandatory before depart to India


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->